2-வது நாளாக டபுள் டிராப் போட்டி நடந்தது
2-வது நாளாக டபுள் டிராப் போட்டி நடந்தது.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ஆவாரங்குடிப்பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 48-வது ஆண்டு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. இதனை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய 3 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக டபுள் டிராப் பிரிவு போட்டி நடைபெற்றது. போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் ராஜகோபால தொண்டைமான், பிரித்திவிராஜ் தொண்டைமான், ராதாநிரஞ்சனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.