3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை


3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
x

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். ஆனால், தற்போது மீன்பிடிக்க தடைக்காலம் என்பதால் அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சிறு படகின் மூலம் கொஞ்சம் தூரம் மட்டும் கடலுக்கு சென்று சிலர் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால், கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்றும் கடல் சீற்றத்துடன் இருந்ததால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்கள் தங்களது வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story