வருகிற 7-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்


வருகிற 7-ந் தேதி  மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 7-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் ஆகிய பகுதிகளிலும், சூரங்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story