பர்கூர் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு


பர்கூர் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
x

பர்கூர் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு

பர்கூர் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி பழுது

பெருந்துறையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு இரும்பு கம்பிகள் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி காலை 7 மணி அளவில் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தாமரைகரை முதலாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது.

மேற்கொண்டு டிரைவரால் லாரியை இயக்க முடியவில்லை. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் கார், பஸ், லாரி, வேன் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து மெக்கானிக்கை வரவழைத்து லாரி பழுதை சரிசெய்தனர். அதன்பின்னர் லாரி அங்கிருந்து சென்றது. போக்குவரத்து நிலைமை சீரானது. பர்கூர் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் மைசூரு-அந்தியூர் இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story