வ.உ.சி.பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: எஸ்.பி. சண்முகநாதன்


வ.உ.சி.பிறந்தநாள் விழாவில்  அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: எஸ்.பி. சண்முகநாதன்
x

வ.உ.சி.பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வ.உ.சியின் 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) ஓட்டப்பிடாரம் வ.உ.சி. நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகின்றனர்.

தலைமைக் கழகம் அறிவித்த இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள், மகளிர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

முன்னதாக தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி வளாகத்திலுள்ள வ.உ.சியின் உருவச் சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் எனது (எஸ்.பி.சண்முகநாதன்) தலைமையில் காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story