மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்:கலெக்டர் தகவல்


மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 7:45 AM IST)
t-max-icont-min-icon

மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் நடக்காதவர்களை நடப்பதற்கு ஊக்கப்படுத்துவதற்காக இந்த நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நடப்பதால் ஏற்படும் நன்மைகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நவீன காலத்தின் நடைபயிற்சியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நடப்போம் நலம் பெறுவோம் என்னும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நல்வாழ்வு பேணுவதற்கான நடைபயிற்சியினை ஊக்குவிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் இணைந்து நடைபயிற்சி மேற்கொள்வதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜாராம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story