கம்பம்மெட்டு மலைப்பாதையில்குவிலென்ஸ் கண்ணாடி பொருத்தம்
கம்பம்மெட்டு மலைப்பாதையில் சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடி அகற்றப்பட்டு புதிய கண்ணாடி பொருத்தப்பட்டது.
கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் கம்பம்மெட்டு 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சாலை மலைப்பாதை வழியாக செல்கிறது. மேலும் இந்த சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், குவிலென்ஸ் கண்ணாடி (கான்வெக்ஸ் மிரர்) பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்தது.
இந்த குவிலென்ஸ் கண்ணாடியை அகற்றிவிட்டு புதிய கண்ணாடி பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் நேற்று கம்பம் போக்குவரத்து போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் தலைமையில் போக்குவரத்து போலீசார் கம்பம்மெட்டு மலைப்பாதையில் சேதமடைந்து கிடந்த குவிலென்ஸ் கண்ணாடியை அகற்றி விட்டு புதிய கண்ணாடி பொருத்தினர். இது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.