ஏரலில்பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


ஏரலில்பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஏரலில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரலில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சித்தராங்கதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை மாவட்ட பார்வையாளர் நீல முரளி யாதவ், மகளிர் அணி மாநில தலைவர் உமாபதி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் ஆலந்தலை பகுதியை சேர்ந்த தி.மு.க.வைச் சேர்ந்த 70 பேர் மாவட்ட தலைவர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட தலைவர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். கூட்டத்தில் செய்துங்கநல்லூரில் செயல்பட்டு வந்த கூட்டுறவு வங்கியை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கருங்குளத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். குரங்கணி வழியாக ஏரல் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும். தென்திருப்பேரையில் திருச்செந்தூர்- நெல்லை மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு செல்லும் குரங்கணி ரோடு சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், மண்டல தலைவர் ராஜகோபால், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜா, சத்தியசீலன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் வாரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் அர்ஜூன் பாலாஜி நன்றி கூறினார்.


Next Story