அக்னி நட்சத்திர நிறைவு நாளையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அக்னி நட்சத்திர நிறைவு நாளையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்
ஈரோடு
அக்னி நட்சத்திர நிறைவு நாள், முருகனின் பிறந்த மாதமான வைகாசி மாதம் மற்றும் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் ஆறு கால பூஜைகள் நடைபெற்றன. அப்போது சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களின் வசதிக்காக கோவில் சொந்தமான பஸ்கள் கூடுதல் முறை இயக்கப்பட்டது.
Related Tags :
Next Story