அண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

அண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரியலூர்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரான அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி வருகிற 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறுகின்றன. அதன்படி வருகிற 16-ந் தேதி அரியலூர் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் பொன்னுசாமி, அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு முன்னாள் தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், நடிகர் சுப்புராஜ், எழுத்தாளார் தில்லை செல்வம் ஆகிேயார் கலந்து கொண்டு பேசுகிறார்கள். ஜெயங்கொண்டம் தொகுதியில் வருகிற 18-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னசாமி, அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு முன்னாள் தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், திருச்சி அரி கிருஷ்ணன், கோவை அழகு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story