அண்ணா பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்


அண்ணா பிறந்தநாளையொட்டி  விழுப்புரம் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி  கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்
x

அண்ணா பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி விளையாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி விழுப்புரம் அருகே கோலியனூரில் நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட கலெக்டர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோட்டில் இருந்து தொடங்கி கா.குப்பம் வழியாக சென்று விழுப்புரத்தில் முடிவடைந்தது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி பரிசு வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story