அனுமந்த் ஜெயந்தியையொட்டிவீர ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை சாத்தி வழிபாடு
அனுமந்த் ஜெயந்தியையொட்டி ஆண்டிப்பட்டி வீர ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை சாத்தி வழிபாடு நடந்தது.
தேனி
ஆண்டிப்பட்டி மேற்கு ஓடைத் தெருவில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை வீர ஆஞ்சநேயருக்கு பால், பழம் தயிர், தேன், இளநீர், பன்னீர், பழ வகைகள், திருநீறு உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும் ஆஞ்சநேயருக்கு 1,008 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாத்தப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story