ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்


ஆயுத பூஜையையொட்டி  ஈரோட்டில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 29 Sept 2022 1:00 AM IST (Updated: 29 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையையொட்டி

ஈரோடு

ஆயுத பூஜை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் பூஜை செய்யப்படும். பூஜையில் முக்கிய பொருளாக பொரி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இதனால் ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பொரி உற்பத்தி செய்யும் பணி தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஈரோடு சூளை பகுதியில் பொரி உற்பத்தி செய்யும் ஒருவர் கூறும்போது, 'பொரி தயாரிப்பதற்காக இன்டேல் -64 என்ற நெல் கொண்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த நெல்கள் வேகவைத்து அரிசியாக்கப்படுகிறது. பின்னர் உப்பு, சர்க்கரை, சோடா உப்பு கலந்த தண்ணீரில் சுமார் 1 மணி நேரம் அரிசி ஊரவைக்கப்படும். இதைத்தொடர்ந்து அந்த அரிசி சுடுமணலில் போட்டு பொரியாக்கப்படுகிறது. பொரி தயாரிக்கும்போது எந்தவித ரசாயன பொருட்களையும் நாங்கள் கலப்பதில்லை. எந்திரங்களை பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் கைகளினால் பொரி தயார் செய்கிறோம்' என்றார்.


Next Story