காலிங்கராயன் தினத்தையொட்டி முளைப்பாரி விடும் விழா
காலிங்கராயன் தினத்தையொட்டி முளைப்பாரி விடும் விழா நடந்தது.
ஈரோடு
ஊஞ்சலூர்
750 ஆண்டு பாரம்பரியம் மிக்க காலிங்கராயன் வாய்க்காலை வெட்டியவர் காலிங்கராயன். இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் காலிங்கராயன் பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை காலிங்கராயன் தினமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி பொங்கல் அன்று முளைப்பாரி எடுத்து வந்து காலிங்கராயன் வாய்க்காலில் விட்டும், தீபங்கள் விட்டும் மரியாதை செலுத்துவர்.
இந்த நிலையில் காலிங்கராயன் தினத்தையொட்டி ஊஞ்சலூர் அருகே உள்ள கிளாம்பாடி பேருராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விட்டு மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story