திருச்செந்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சுவாமி ஆதிசேஷன் வாகனத்தில் எழுதருளல்
திருச்செந்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சுவாமி ஆதிசேஷன் வாகனத்தில் எழுதருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ருக்மினி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜையும், விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. காலை பக்தர்கள் திருமஞ்சனத்தில் பஜனை பாடினர். பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஆதிசேஷன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணன் வேடம் அணிந்து வந்தனர். பின்னர் இரவு உரியடி நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கிருஷ்ண அவதார வேடம் அணிந்து வந்த சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story