மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமைஇறைச்சி விற்பனை செய்ய தடை
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தமிழ்நாட்டில் பகவான் மகாவீரர் ஜெயந்தி தினத்தன்று இறைச்சிகளை வெட்டவும், விற்பனை செய்யவும் கூடாது எனவும் மாமிச கடைகள் மற்றும் இறைச்சி கொட்டகைகள் மூடப்பட்டு அன்று ஒருநாள் விடுமுறை தினமாக அனுசரிக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்து உள்ளது. அதனடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் மாமிச மிருகங்களை வெட்டவும், கடைகளில் மாமிசம் விற்பனை செய்யக்கூடாது என்றும், ஒரு நாள் விடுமுறை தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story