மிலாது நபி விழாவையொட்டி மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி


மிலாது நபி விழாவையொட்டி மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மிலாதுநபியையொட்டி ஊட்டியில் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

நீலகிரி

ஊட்டி

மீலாடி நபியையொட்டி ஊட்டியில் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

மிலாது நபி

இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாடி நபி திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி நபிகள் நாயத்தின் பிறந்த நாள் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மீலாடி நபி விழா பல்வேறு பகுதிகளிலும் நடந்தது. இதில், ஊட்டி பெரிய பள்ளி வாசல், சின்ன பள்ளிவாசல், காந்தல் பள்ளிவாசல் உட்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடந்தன.

ஊட்டியில், பெரிய பள்ளிவாசலில் நடந்த மீலாடி நபி ஊர்வலத்திற்கு செய்யது முகமது ஷா தலைமை வகித்தார். இதை கலெக்டர் அம்ரித் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெரிய பள்ளிவாசல் இமாம் சுல்தான் ஆலம், செயலாளர் உபயத்துல்லா, அருள்தந்தை சாலமன், முள்ளிக்கொரை கோபால்சாமி, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர். ஊர்வலமானது பெரிய பள்ளிவாசலில் இருந்து ஏ.டி.சி. வரை நடந்தது.

பரிசுகள் வினியோகம்

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் மதரஸா மாணவ- மாணவிகளுக்கு குரான் ஓதும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த விசேஷ திருநாளில் "அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய நாட்டில் பன்முகத்தன்மையை போற்றிட மீலாடி நபி நாளில் சபதம் ஏற்போம்" என இஸ்லாமியர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story