புரட்டாசி பவுர்ணமியையொட்டி பவானி கூடுதுறையில் புனித நீராடிய பக்தர்கள்


புரட்டாசி பவுர்ணமியையொட்டி   பவானி கூடுதுறையில் புனித நீராடிய பக்தர்கள்
x

புரட்டாசி பவுர்ணமியையொட்டி பவானி கூடுதுறையில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

ஈரோடு

பவானி

புரட்டாசி பவுர்ணமியையொட்டி பவானி கூடுதுறையில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

பவானி கூடுதுறை

பவானி கூடுதுறையில் காவிரி ஆறு, பவானி ஆறு, கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதி ஆகியவை கூடுவதாக ஐதீகம்.

எனவே தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மார்கழி அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

இதனால் திரளான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து அங்குள்ள சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

புனித நீராடினர்

இதேபோல் புரட்டாசியில் வரும் பவுர்ணமி நாளில் பவானி கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று பவுர்ணமிநாள் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடினர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமியை வழிபட்டனர். இதையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் மாலையில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story