தமிழ்புத்தாண்டை முன்னிட்டுபூக்கள் விற்பனை அமோகம்
தமிழ்புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
தூத்துக்குடியில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
தமிழ் புத்தாண்டு
தமிழ் மாதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் சித்திரை மாதமும் ஒன்றாகும். இந்த சித்திரை மாத பிறப்பை சித்திரை விசுவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மக்களும் வீடுகளில் பூக்களால் அலங்கரித்து வழிபாடு செய்வார்கள். இதனால் மக்கள் அதிக அளவில் நேற்று பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
விலை விவரம்
அதன்படி நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கும், பிச்சிப்பூ ரூ.1500-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், பட்டன்ரோஸ் ரூ.100-க்கும், அரளி ரூ.350-க்கும், பச்சை ரூ.10-க்கும், ரோஜா ரூ.300-க்கும், மரிக்கொழுந்து ரூ.40-க்கும் விற்பனையானது. இதனை அதிக அளவில் மக்கள் வாங்கி சென்றனர்.