கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 224-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 224-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 224-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நினைவு நாள்
கயத்தாறிலுள்ள சுதந்திர போராட்டவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபத்தில் நேற்று அவரது 224- வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் சார்பில் மாநில கவுரவத் தலைவர் பேராசிரியர் மு.சங்கரவேலு தலைமையில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராமலிங்கம், அமைப்பு செயலாளர் சுப்புராஜ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன், மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.
தொட்டி நாயக்கர் சங்கத்தை சேர்ந்த மாநில தலைவர் நாமக்கல் பழனிசாமி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் சுருளிமணி, நாகராஜ் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், மேற்கு ஓன்றிய செயலாளர் கருப்பசாமி, கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் ராஜதுரை, பேரூர் செயலாளர் சுரேஷ்கண்ணன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, சன்முகநாதன், அமைப்பு செயலாளர் சின்னத்துரை மற்றும் அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நேரடி வாரிசு
வீரபிண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீரபாண்டிய கட்டபொம்மு, இந்து மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் லெட்சுமிகாந்தன் தலைமையில் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, வடக்கு இலந்தைகுளம், ஆத்திகுளம், கோவில்பட்டி, விருது நகர், சிவகாசி, ராஜபாளையம், தேனி, ராமநாதபுரம், மும்பை உள்பட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மணிமண்டபத்தின் முன்பு உள்ள வீர சங்கதேவி கோவில் முன்புறம் ஏராளமானோர் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பா.ஜ.க.
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவச்சிலைக்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சசிகலாபுஷ்பா தலைைமயில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதபோன்று பா.ஜ.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சென்னகேசவெங்கடேசன், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு ஒன்றிய தலைவர் அய்யாதுரை, கயத்தாறு கிழக்கு ஒன்றிய மண்டல தலைவர் முருகன் மற்றும் பலர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை ஆதீனம்
இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் தேசிக பிரமாச்சாரிய சுவாமி வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓ.பி.எஸ். அணி-தே.மு.தி.க
ஓ.பி.எஸ. அணியை சேர்ந்த அமைப்புச் செயலாளர்கள் முருகையா பாண்டியன், லயன் மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் கருப்பூர் சீனி என்ற ராஜகோபால் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் கயத்தாறு நகர செயலாளர் கண்ணண், ஒன்றியசெயலாளர் அருண்நடராஜன் முன்னிலையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், மாவட்டதுணைசெயலாளர் மாரிச்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.