ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டுஈரோட்டில் ஜவுளி விற்பனை களைகட்டியது


ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டுஈரோட்டில் ஜவுளி விற்பனை களைகட்டியது
x

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஈரோட்டில் ஜவுளி விற்பனை களைகட்டி உள்ளது.

ஈரோடு

ஈரோடு கனிமார்க்கெட், அசோகபுரம், பழைய சென்டிரல் தியேட்டர் பகுதி, கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகம் உள்ளிட்ட இடங்களில் ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளும் கொண்டு வரப்படுகின்றன. ஜவுளியை வாங்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். மேலும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல்வேறு வெளிமாநில வியாபாரிகளும் வந்து ஜவுளியை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். அங்கு தீபாவளி, பொங்கல், ஓணம், ஹோலி போன்ற பண்டிகை காலத்தில் ஜவுளி விற்பனை அமோகமாக காணப்படும்.

இந்தநிலையில் ஆடிப்பெருக்கு விழா வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பலரும் புத்தாடை அணிந்து சாமியை வழிபடுவது வழக்கம். இதனால் ஈரோடு மார்க்கெட்டில் ஜவுளி விற்பனை களைகட்ட தொடங்கியது. ஈரோட்டில் கடந்த 2 நாட்களாக நடந்த சந்தையில் வியாபாரிகள் பலர் வந்து மொத்தமாக ஜவுளியை வாங்கி சென்றதாகவும், பொதுமக்கள் பலர் புத்தாடைகளை வாங்கியதால் சில்லரை விற்பனை களைகட்டியதாகவும் ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story