கடைசி புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்


கடைசி புரட்டாசி சனிக்கிழமையையொட்டி  திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை  பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடைசி புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத 4-வது மற்றும் கடைசி வார புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் நேற்று கடைசி வார சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பை தோப்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காட்டுமன்னார்கோவில்

இதேபோல் காட்டுமன்னார்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற வீரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story