சூரியகிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைப்புசிறப்பு பூஜைக்கு பின் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதி


சூரியகிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைப்புசிறப்பு பூஜைக்கு பின் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதி
x

சூரியகிரகணத்தையொட்டி நேற்று கோவில்கள் பகலில் நடைசாத்தப்பட்டிருந்தது. கிரகணம் முடிந்தபின்னர் மாலை 7மணிக்கு கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்,

சூரியகிரகணத்தையொட்டி நேற்று கோவில்கள் பகலில் நடைசாத்தப்பட்டிருந்தது. கிரகணம் முடிந்தபின்னர் மாலை 7மணிக்கு கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சூரியகிரகணம்

அமாவாசை தினமான நேற்று சூரியகிரகண நிகழ்வு நேற்று மாலை நிகழ்ந்தது. இதனையொட்டி கிரகணம் தொடங்குவதற்கு முன்னதாகவே கோவில்களில் நடை சாத்தப்பட்டது. சூரிய கிரகணத்தையொட்டி நேற்று பகல் ஒரு மணிக்கு பிறகு ஆரணியில் கோவில்கள் நடை சாத்தப்பட்டன. கிரகணம் மாலை 6.30 மணிவரை நீடித்தது.

கிரகணத்தையொட்டி ஆரணியில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில், வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சாமி கோவில், வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சாமி கோவில், கொசப்பாளையம் மாரியம்மன் கோவில், ஆரணிப்பாளையம் மாரியம்மன் கோவில், கில்லா வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் பகல் 1 மணிக்கே நடைசாத்தப்பட்டது.

பின்னர் கோவிலை தூய்மைப்படுத்தி இரவு 7 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆரணி நகரில் உள்ள அனைத்து பிரதான ஓட்டல்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை.

ரேணுகாம்பாள் கோவில்

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் கோவில் நடை மூடப்பட்டு, கிரஹண சாந்தி பூஜைகள் செய்தபின் இரவு 7 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டது.

வாணாபுரம் அருகே வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று சூரிய கிரகணம் என்பதால் அம்மனுக்கு எந்த ஒரு அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படவில்லை.

சூரிய கிரகணம் முடிந்து மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதே போல் அகரம் பள்ளிப்பட்டு அம்மன் கோவிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது. பின்னர் கிரகணம் முடிந்ததும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டது.

இதே போல் ஆரணி நகரிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று சூரிய கிரகணம் மாலை 4.15 முதல் 6.15 வரை நிகழ்ந்தது. அந்த சமயத்தில் உலக்கையை தரையில் நிற்க வைத்து சாயாமல் நின்ற அதிசயத்தை பொதுமக்கள் பார்த்து வியப்படைந்தனர்.


Next Story