கம்பத்தில் தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் : நகர செயலாளர் உள்பட 6 போ் மீது வழக்கு
கம்பத்தில் தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய நகர செயலாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்திவு செய்தனர்.
தேனி
கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 40). தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். கம்பம் தெற்கு தி.மு.க. நகர செயலாளராக உள்ளார். கடந்த 12-ந்தேதி இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்வக்குமார் மற்றும் அங்கு வந்த அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, கமலகண்ணன், கற்பகராஜ் உள்பட 6 பேரும் சேர்ந்து தயாளனை அவதூறாக பேசி, கைகளால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார், செல்வக்குமார், அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story