கம்பத்தில்விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


கம்பத்தில்விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கம்பம் காமாட்சி நகரை சேர்ந்த குமரேசன் மகன் லோகேஷ் (வயது 24). இவரது பெற்றோர் கேரளாவில் வசித்து வருவதால் லோகேஷ் கம்பத்தில் உள்ள பாட்டி கமலா பராமரிப்பில் இருந்து கல்லூரிக்கு சென்று பி.காம். படித்து வந்தார். கடந்த ஆண்டு கமலா உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.

இதனால் பாட்டி இறந்த துக்கத்தில் லோகேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது வீட்டில் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் லோகேஷ் விஷம் குடித்ததால் அவர் உயிரிழந்ததாக கூறினர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story