கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் ரூ.50 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்


கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில்   ரூ.50 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் ரூ.50 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் ரூ.50 லட்சத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோத்தகிரி நெடுஞ்சாலைத் துறை சார்பில் பருவமழைக்கு முன்னதாக மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புச்சுவர் கட்டும் பணி, மழை நீர் கால்வாய் அடைப்புக்களை சுத்தம் செய்யும் பணி, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்யும் பணி, சாலையோர தடுப்புச் சுவர்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணி, பாலங்கள் பழுது பார்த்தல், சாலைகளை அகலப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசல் குறையும்

இதன் ஒரு பகுதியாக ரூ.50 லட்சம் செலவில் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்யும் பணிகள், தடுப்புச்சுவர்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது சாலையோர தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் நிறைவடைந்தால் சீசன் நேரத்தில் சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி சென்று வர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story