மழை பெய்த போது சாலையில் தவறி விழுந்தவர் சாவு


மழை பெய்த போது சாலையில்   தவறி விழுந்தவர் சாவு
x

மதுரை கூடல்நகரில் மழை பெய்த போது சாலையில் தவறி விழுந்தவர் இறந்தார். ஆம்புலன்சு சகதியில் சிக்கி கொண்டதால் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

மதுரை கூடல்நகரில் மழை பெய்த போது சாலையில் தவறி விழுந்தவர் இறந்தார். ஆம்புலன்சு சகதியில் சிக்கி கொண்டதால் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் தவறி விழுந்தவர் சாவு

மதுரை கூடல்நகர் சொக்கலிங்க நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 45). நேற்று முன்தினம் இரவு இவர் அந்த வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அந்த நேரத்தில் மழை பெய்ததால் சாலையில் தவறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு அங்கு வரும் போது மழையின் காரணமாக சகதியில் சிக்கி கொண்டது. ஆம்புலன்சு உரிய நேரத்தில் வந்திருந்தால் வேணுகோபாலை மீட்டு அவரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கூடல்நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று அந்த பகுதி மக்கள் சாலைசரியில்லாத காரணத்தினால் தான் ஆம்புலன்சு தெருவிற்குள் வரமுடியவில்லை என்று கூறியும், அதனால் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க கோரியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story