புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 37 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 37 பேர்  கைது
x

புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி


திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் மாநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகேயும், பொது இடங்களிலும் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 37 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகரில் தொ டர்ந்து புகையிலை பொருட்களை விற்றால் விற்பனை செய்யும் கடையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story