சபரிமலை செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்


சபரிமலை செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
x
தினத்தந்தி 27 Nov 2022 4:54 PM IST (Updated: 27 Nov 2022 5:00 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் உற்சாகமாக குளித்து சென்றனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் இங்குள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது.

இந்த நிலைலயில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்கிறார்கள். தண்ணீர் நன்றாக விழுவதால் அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து செல்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. வெயில் அடித்து வருகிறது. தொடர்ந்து வெயில் அடித்தால் அருவிகளில் தண்ணீர் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.


Next Story