திருவள்ளுவர் தினத்தில்மதுவிற்ற 66 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தில் மதுவிற்ற 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதனால் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை நடக்காமல் தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதில் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 66 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 644 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 400 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story