ஈரோட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்அத்தப்பூ கோலமிட்டு உற்சாகம்
ஈரோட்டில் ஓணம் பண்டிகை அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாட்டப்பட்டது.
ஈரோட்டில் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஓணம் பண்டிகை
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பலரும் தங்கள் வீட்டின் வரவேற்பு அறையிலும் அழகிய அத்தப்பூ கோலமிட்டு, தென்னை பூ, நெல் படைத்து பாரம்பரிய முறைப்படி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
விருந்து
ஆண்கள் வேட்டி- சட்டை அணிந்தும், பெண்கள் பாரம்பரிய உடையான சந்தன பட்டு, வெண் பட்டு உடுத்தியும் நடனமாடினர். இதுபோல் மலையாள மக்கள் தங்கள் நண்பர்களை அழைத்து ஓணம் பண்டிகை விருந்து அளித்து மகிழ்ந்தனர். வாழை இலையில் கேரளாவின் பாரம்பரிய பதார்த்தங்கள், பாயாசம் என விருந்து உபசரிப்பு அளித்தனர்.
ஈரோட்டில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் கேரள பாரம்பரிய வெண்பட்டு, சந்தன பட்டு சேலைகள் அணிந்து வேலைக்கு சென்றனர். இதுபோல் பள்ளிக்கூட ஆசிரியைகளும் பாரம்பரிய உடை அணிந்து வந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.