ஓணம் பண்டிகை ெகாண்டாட்டம்
எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் ஓணம் பண்டிகை ெகாண்டாடப்பட்டது.
நீலகிரி
குன்னூர்,
கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.குன்னூர் அருகே வெலிங்டன் பேரக்ஸ் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ராணுவ முகாம் வளாகத்தில் பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. ராணுவ வீரர்கள் செண்டை மேளத்தை இசைத்தனர். மேலும் ஈட்டி வீச்சு, வாள் சண்டை போன்றவற்றை தத்ரூபமாக செய்து காண்பித்தனர். தொடர்ந்து ராணுவ வீரர் ஒருவர் மாவேலி மன்னன் வேடமணிந்து வலம் வந்தார். இது பார்வையாளர்களை கவர்ந்தது.
Related Tags :
Next Story