ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x

ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி, ஜூன்.4-

திருச்சி, கலெக்டர் அலுவலக சாலையில் புகழ்பெற்ற ஒண்டி கருப்பண்ணசுவாமி, ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒண்டிக்கருப்பண்ண சுவாமி, ராஜகாளியம்மன், பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதனையொட்டி காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளின் விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story