கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது
மதுரையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவருடைய மனைவி செல்வி. இவர், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 58) மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் கடனாக வாங்கி உள்ளார். அதற்காக மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி தொகை செலுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக அவர் வட்டி தொகை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், ஆறுமுகம் மற்றும் பூரணம் ஆகியோர் செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கந்து வட்டி வழக்கில் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். மதுரை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கந்து வட்டி கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் யாராவது இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசில் புகார் அளிக்கலாம் எனவும், கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.