நிலமோசடியில் ஒருவர் கைது


நிலமோசடியில் ஒருவர் கைது
x

நிலமோசடியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி பகவதி. இவருக்கு சொந்தமாக வடக்கு வள்ளியூர் பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் 20 செண்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை வடக்கு வள்ளியூரைச் சேர்ந்த அழகேசன் (52) என்பவர் பகவதி போல் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயார் செய்து வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த மோசடி பற்றிய விவரம் பின்னர் பகவதிக்கு தெரியவந்தது. இதையடுத்து பகவதி தனது நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுப்படி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள் பானு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அழகேசனை போலீசார் கைது செய்தனர்.


Next Story