ெரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
ெரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை சாலையில், ரெயில் தண்டவாளம் அருகே சைக்கிளில் 55 வயதுடைய ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த வழியாக சென்றவர்களிடம் ெரயில் எப்போது வரும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர் ஓட்டி வந்த சைக்கிளை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அந்த வழியாக காரைக்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு உடலும், தலையும் தனித்தனியாக தண்டவாளத்தில் கிடந்தது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story