போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம்
போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம்
திருப்பூர்
போடிப்பட்டி
உடுமலையையடுத்த குரல்குட்டையில் டிஒய்எப்ஐ சார்பில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கியது.கையெழுத்து இயக்கத்தை முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் தட்சிணாமூர்த்தி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.டிஒய்எப்ஐ நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டறிக்கைகள் கொடுத்து கையெழுத்து பெற்றனர்.குரல் குட்டை மேற்கு, நால்ரோடு, நெசவாளர்பகுதி, காமாட்சிஅம்மன் கோயில் உட்பட்ட பகுதிகளில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆர்வமுடன் வரவேற்று கையெழுத்திட்டனர். போதைக்கு எதிராக குரல் கொடுக்க தயாராக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story