ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி


ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
x

கிராம வளர்ச்சி திட்டம் குறித்து ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பொது நிதி மேலாண்மை மற்றும் கிராம வளர்ச்சி திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் வரவேற்றார். பொதுநிதி மேலாண்மை அமைப்பு மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுதல், கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், 15-வது நிதிக்குழு மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது ஆகியவை குறித்து கணினி பயிற்றுனர் சிவகுமார் மற்றும் மைக்கேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அயூப்கான், சவரிராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கர், ரமேஷ்குமார், பாப்பாத்தி, அய்யம்மாள், ஜீவா, செந்தாமரை, ஜெயசித்ரா, பாக்கியம், வைத்தியநாதன், கோவிந்தராஜ், அலெக்சாண்டர், தனகோட்டி, அர்ச்சனா, சித்ரா, முருகன், பகருன்னிசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story