ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி


ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
x

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.

திருப்பத்தூர்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் சைல்டு லைன் 1098 சார்பில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு குழந்தை தொழிலாளர்கள் முறை அகற்றும் சட்டங்கள் குறித்து ஒருநாள் பயிற்சி நேற்று அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்தது. வேலூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொது மேலாளர் மோகனவேல் திட்ட விளக்க உரையாற்றினார் ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், துணைத்தலைவர் சித்ரா குமார பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் வரவேற்றார்.

இதில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளின் உரிமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் சட்டங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story