கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணையில் மூழ்கி வாலிபர் சாவு


கள்ளக்குறிச்சி அருகே    மணிமுக்தா அணையில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணையில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு மகன் அந்தோணிசாமி (வயது 27). இவர் உள்பட 42 பேர் அணைக்கரைகோட்டாலத்தில் உள்ள மணிமுக்தா அணையில் மீன் வளர்ப்பு குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தோணிசாமி நேற்று அணை பகுதியில் யாரேனும் மீன்பிடிக்கிறார்களா? என்று கண்காணித்து வந்தார். அப்போது, நண்பகல் 2.30 மணியளவில் அணையில் உள்ள 2-வது மதகு பகுதியில் கால்தவறி தண்ணீருக்குள் அவர் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதை அந்த பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்தனர். உடன் அவர்கள் கிராம பகுதிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி கிடந்த அந்தோணிசாமியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story