மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

கரைப்பாளையம் அருகே உள்ள ஆலமரத்து மேடு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 53). இவர் ஆத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராமமூர்த்தி நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே வந்து ெகாண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ராமமூர்த்தியின் மகன் ராகவ் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.


Next Story