ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில்ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில்ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் நேற்று மதியம் 3.30 மணியளவில் ஹவுராவில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்த ரெயிலில் திருச்சி குற்றத்தடுப்பு கண்டறிதல் படையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்த சந்தேகத்திற்கு இடமான ஒரு பையை சோதனை செய்தனர். அதில் இருந்த ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். இதையடுத்து அந்த கஞ்சா திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story