ஒரு கிேலா தக்காளி ரூ.20-க்கு விற்பனை


ஒரு கிேலா தக்காளி ரூ.20-க்கு விற்பனை
x

ஒரு கிேலா தக்காளி ரூ.20-க்கு விற்பனை

திருப்பூர்

வி.மேட்டுப்பாளையம்

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வார சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்களை வாங்கி செல்வார்கள். இந்த சந்தையில் நேற்று தக்காளி ஒரு கிலோ ரூ. 20-க்கும், கத்திரிக்காய் 20-க்கும், வெண்டைக்காய் 40-க்கும், முட்டைக்கோஸ் ரூ.20-க்கும், கேரட் 60-க்கும், பீன்ஸ் ரூ. 80-க்கும், உருளைக்கிழங்கு 30-க்கும், பெரிய வெங்காயம் 20-க்கும், சின்ன வெங்காயம் 70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவல்களைசந்தை வியாபாரி சிவா தெரிவித்தார்.


Next Story