கார் மோதி ஒருவர் பலி


கார் மோதி ஒருவர் பலி
x

கார் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த பிச்சமணியாரம்பட்டியை சேர்ந்தவர் ஆல்பர்ட் விக்டர்(வயது 44). இவர் நேற்று முன்தினம் பாண்டியன்(32) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆல்பர்ட் விக்டர் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாண்டியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story