மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
எருமாடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியானார்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா எருமாடு அருகே வெட்டுவாடி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 52). இவர் நேற்று முன்தினம் மாலை எருமாடு பஜாருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். பள்ளி சந்திப்பு அருகே சென்ற போது, எருமாடு ேநாக்கி சென்ற மோட்டார் சைக்கிள் நாராயணன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சுல்தான்பத்தேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நாராயணன் இறந்தார். இதுகுறித்து எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.