வாகனம் மோதி ஒருவர் பலி
வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
புதுக்கோட்டை
திருமயம் அருகே ஏனப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் இறந்து கிடப்பதாக நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் வாகனம் மோதி இறந்திருக்கலாம் என்றும், இறந்தவர் உடல் மீது அடுத்தடுத்து வாகனம் மோதியதால் உடல் சிதைந்து அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினர். இதற்கிடையே போலீசார் இறந்தவர் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story