திருச்சியில் இருந்து இலங்கைக்கு மேலும் ஒரு விமான சேவை


திருச்சியில் இருந்து இலங்கைக்கு மேலும் ஒரு விமான சேவை
x

திருச்சியில் இருந்து இலங்கைக்கு மேலும் ஒரு விமான சேவை இயக்கப்பட உள்ளது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கைக்கு காலை மற்றும் மதியம் நேரங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சார்பில் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சரிவு காரணமாக விமான சேவையினை குறைத்து காலை நேர விமான சேவை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் இருந்து திருச்சிக்கு பிட் ஏர் விமான நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவையினை வருகிற 29-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் இலங்கையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடையும். பின்னர் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சென்றடையும் என தெரிகிறது.


Next Story