தென்தாமரைகுளம் அருகே டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


தென்தாமரைகுளம் அருகே டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

தென்தாமரைகுளம் அருகே டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகே டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர் கொலை

தென்தாமரைகுளம் அருகே உள்ள தேங்காய்காரன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் (வயது38). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இவர் ஊருக்கு வந்திருந்தபோது பணம் பிரச்சினை தொடர்பாக நண்பர்கள் 7 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை ரெஜி தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், சுபாஷ், ஜெகன், வினோத், ஸ்ரீ கிருஷ்ணன், சுடர் ஆனந்த் ஆகிய 6 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த கொலையில் தொடர்புடைய முகிலன்குடியிருப்பை சேர்ந்த பிரதீப் (30) என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story