மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
வள்ளியூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
வள்ளியூர்:
வள்ளியூர், பணகுடி, பழவூர், ராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின. இதுதொடர்பாக வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் வள்ளியூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு போலியாக ஆர்.சி. புத்தகம் தயாரித்து கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், தொட்டியகாரன்விளையை சேர்ந்த வேலையா (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story