விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஈரோடு

சோலார்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவரிடம் 7 பேர் கொண்ட கும்பல் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் பகுதியில் வைத்து நூதன முறையில் ரூ.35 லட்சத்தை பறித்து விட்டு சென்றனர். இதுதொடர்பாக கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (58), வேலூர் அருகே உள்ள போத்தனூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (59) ஆகியோரை ஈரோடு நகர குற்றப்பிரிவு மற்றும் மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மாதேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்டம் திருச்சி ரோடு காந்திகிராமம் அருகே உள்ள சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் மகன் கண்ணன் (52) என்பவர் கரூர் மாவட்டம் புதுப்பாளையம் மணமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று கண்ணனை கைது செய்தனர். மேலும் கண்ணனிடம் இருந்த நம்பர் பிளேட் இல்லாத கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story